அரசு மருத்துவமனையில் முதியவருக்கு.செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த கொடுமை

அரசு மருத்துவமனையில் முதியவர் ஒருவருவருக்கு.செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த கொடுமை அரங்கேறியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக பலர் பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இந்த நிலையில் பல்லடம் செஞ்சேரிமலை பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். இந்நிலையில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும் ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் இயங்கவில்லை. இதனால் செல்போன் டார்ச் லைட் உதவியுடன் மருத்துவம் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.