இஸ்லாமியர்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு..!

தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகின்றது. அந்த குறைதீர் கூட்டத்தில், சொந்தப் பிரச்சனையில் இருந்து சமூக பிரச்சனைகள் வரைக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் மக்கள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

அவ்வாறு, தாராபுரம் தாலுக்கா அலங்கியம் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமியர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருப்பூர் மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.