பரூக் அப்துல்லா: ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு ஏற்ப நல்லாட்சியை வழங்குவார்கள்

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தங்கள் வசப்படுத்தியுள்ள தலீபான்கள், அங்கு அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இடைக்கால மந்திரிசபையையும், இடைக்கால பிரதமரையும் தலீபான்கள் அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆப்கானிஸ்தானில் ஆட்சி குறித்து பேசுகையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலீபான்கள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு ஏற்ப நல்லாட்சியை வழங்குவார்கள், மனித உரிமையை மதித்து நடப்பார்கள் என நம்புகிறேன். நாட்டின் புதிய தலைவர்கள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும். அனைத்து நாடுகளுடன் அவர்கள் நட்புறவை அவர்கள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.