ஆடு மேய்ப்பவர் முதல் அரசியல்வாதி வரை 15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய சத்யாவின் பெயரை குடும்ப அட்டையில் இணைக்க முயன்ற போது மாட்டிக்கொண்ட சம்பவம் அடங்கும் முன்பே, மதுரை விளாங்குடி அபிநயா இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் பலரிடம் நெருக்கமான பழக்கி திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் என்ற செய்தி மெல்ல மெல்ல மறைய தொடங்கும்போது, சாலையில் செல்லும் ஆண்களிடம் டூவீலர், கார்களில் லிப்ட் கேட்டு செல்லும்போது, தன்னை மருத்துவர் என்று சொல்லி பேச துவங்கி, காதல் வலை விரித்து திருமணம் செய்து நண்பர்கள் வைத்த பேனரில் வலைதளங்களில் பரவி வருகின்றது.
அரசு ஊழியர், மருத்துவர், செவிலியர் எனக் கூறி 4 பேரை திருமணம் செய்ததை மறைத்து சீர்காழி வங்கி ஊழியரை 5-வதாக திருமணம் செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டையை சேர்ந்த சிவசந்திரன் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிதம்பரம் அருகே பைக்கில் சிவசந்திரன் சென்றபோது சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் மீனவ கிராமத்தை சேர்ந்த லட்சுமி லிப்ட் கேட்டு உடன் சென்றுள்ளார்.
அப்போது, தான் மருத்துவர் எனவும், சிதம்பரத்தில் வேலை பார்ப்பதாகவும் லட்சுமி தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சிவசந்திரன் லட்சுமியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி சீர்காழியில் கடந்த 20-ஆம் தேதி சிவச்சந்திரன் தடபுலாக விழா நடத்தி லட்சுமியை திருமணம் செய்தார். அந்த திருமணத்தின்போது சிவசந்திரனின் நண்பர்கள் வைத்த பேனர் வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த லட்சுமியின் முன்னாள் கணவரான நெப்போலியன் அதிர்ச்சியடைந்ததோடு சிவச்சந்திரனை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிந்து கொண்டார். மேலும் லட்சுமி ஏற்கனவே தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததையும் அவரிடம் போனில் கூறியுள்ளார்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்த சிவச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிவச்சந்திரன் புகார் செய்தார். அதில், தன்னை ஏமாற்றிய லட்சுமியால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த லட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிந்து லட்சுமியை நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
காவல்துறை விசாரணையில், அதில், லட்சுமி பழையாறை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகளில் சிலம்பரசன் இறந்து விட்டார். இதனால் லட்சுமி, குழந்தைகளை தனது தாய் வீட்டில் விட்டு விட்டு 2017-ஆம் ஆண்டு புத்தூரை சேர்ந்த பெயிண்டர் நெப்போலியன் என்பவரிடம், தனது பெயர் மீரா என்றும், செவிலியர் வேலை செய்வதாகவும் கூறி காதலித்து திருமணம் செய்துள்ளார்.
சிறிது காலத்தில் நெப்போலியனை விட்டு பிரிந்து 2021-ஆம் ஆண்டு சிதம்பரம் கோல்டன் நகரில் வசித்து வந்த ராஜா என்பவரிடம் அறிமுகமாகி தனது பெயர் நிஷாந்தினி என்றும், MBBS, MS படித்து விட்டு வீட்டில் இருப்பதாகவும் கூறி அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சிதம்பரத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் ராஜாவிடம் தான் கோயம்புத்தூரில் மருத்துவராக பணிபுரிய உள்ளதாக கூறி அங்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்தாண்டு சீர்காழி திட்டையை சேர்ந்த சிவசந்திரனிடம் பைக்கில் லிப்ட் கேட்டு சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில் கடந்த 20-ஆம் தேதி சிவச்சந்திரனை திருமணம் செய்ததும், பணத்துக்காக அவர் பலரை ஏமாற்றி திருமண லீலையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கரூரை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்ததாகவும், அவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் லட்சுமி பற்றி அவருக்கு தெரியவில்லை என தெரிகிறது.
மேலும் கரூரை சேர்ந்த ஒருவர் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், அவர் மாதமாதம் குடும்ப செலவுக்காக ரூ.50,000 அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தை, லட்சுமி தனது சம்பளம் என கூறி கணவர்களை ஏமாற்றி வந்துள்ளார். டாக்டர் என்பதால் லட்சுமிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். ஒரு கணவர், வீட்டில் மாடுகளை விற்று மாடல் டாய்லெட் கட்டி கொடுத்துள்ளார்.
லட்சுமி பார்ப்பதற்கு வசீகர தோற்றமும், உடல்வாகும் கொண்டவள். வழக்கமாக எப்போது வெளியில் சென்றாலும், சாலையில் செல்லும் ஆண்களிடம் டூவீலர், கார்களில் லிப்ட் கேட்டு செல்லும்போது, மெல்ல, மெல்ல பேச தொடங்கி தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி காதல் வலையை விரித்து திருமணம் செய்து தனது லீலைகளை அரங்கேற்றியுள்ளார். மேலும் லட்சுமி தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பர். அதனால் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி ஏமாற்றியுள்ளார்.