முன்னாள் கணவரையும், உறவுக்கார பெண்ணையும் சரமாரியாக புரட்டி எடுத்த பெண்..!

முன்னாள் கணவரையும், அவருடன் ஆட்டோவில் வந்த உறவுக்கார பெண்ணையும் சரமாரியாக நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்த பெண். ஜீவனாம்சம் கோரி, விவாகரத்தான மனைவி வழக்கு தொடுத்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.. எனினும், யாருமே எதிர்பாராதவகையில், திருவள்ளூர் கோர்ட்டில் இப்படியொரு சம்பவம் நடந்து, பரபரப்பை தந்துவிட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்த சத்யாவிற்கு ஆந்திர மாநிலம் காளஹஸ்தி பகுதியை சேர்ந்த உறவுக்காரரான முனீந்திராவுக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் முனீந்திரா, தொழில் செய்வதற்கு மனைவி சத்யா பெயரில் வங்கியில் 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் தன்னிடமிருந்த 40 சவரன் நகையை அடகுவைத்து கணவருக்கு ஆந்திராவில் கோழி பண்ணை வைத்து கொடுத்துள்ளார்.

ஆனால், முனீந்திராவுக்கு, திடீரென வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சத்யாவுக்கு தெரிந்து கொந்தளித்து போய்விட்டார். இது தொடர்பாக கணவரிடம் கேள்வி எழுப்பியதையடுத்து, தம்பதிக்குள் தகராறு வெடித்தது. இறுதியில், சத்யாவை விவாகரத்து செய்ய முடிவு முனீந்திரா செய்தார். இதற்காக ஆந்திர மாநில நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடுத்து, அந்த விவாகரத்து வழக்கில் வெற்றி பெற்றதால் சத்யாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

ஆனால், விவாகரத்து வழக்கில் சத்யாவுக்கு ஜீவனாம்சம் எதுவும் கொடுக்காததால் சத்யா திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சத்யா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக நேற்றைய தினமும், சத்யாவும், முனீந்திராவும் ஆஜராகி இருவருமே வாய்தாவையும் முடித்துவிட்டு கிளம்பினார்கள். இதில், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் ஆட்டோவில் உறவுக்கார பெண்ணுடன் முனீந்திரா வந்து கொண்டு இடருந்தார்.

அப்போது ஆட்டோவை மடக்கிய சத்யா, முனீந்திராவை அடித்து உதைத்தார். தடுக்க வந்த உறவுக்கார பெண்ணுக்கும் சரமாரி உதை விழுந்தது. இதனால் பயந்து போன அநத பெண், ஆட்டோவின் மறுபக்கத்தில் எகிறி குதித்து தப்பிக்க முயன்றார். ஆனால், அவர் கீழேவிழுந்து படுகாயம் அடைந்துவிட்டார். எனினும், முனீந்திராவை சத்யா விடவேயில்லை, நடுரோட்டிலேயே புரட்டி புரட்டி எடுத்தார். இதனால் ரோட்டில் சென்ற அனைவருமே இதை நின்றுகொண்டு வேடிக்க பார்க்க துவங்கிவிட்டனர்.

பிறகு, சத்யாவுடன் வந்த வழக்கறிஞர்கள், ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட சத்யாவை தடுத்து நிறுத்தினார்கள். முனீந்திரா, சத்யா இருவரையுமே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார்கள். அப்போது, முனீந்திராவுக்கு தமிழ் தெரியாதாம், திருவள்ளூர் வழக்கு நடப்பால், தமிழ் பேசத்தெரிந்த உறவுக்கார பெண்ணை முனீந்திரா அழைத்து வந்தாராம். ஆனால், இன்னொரு பெண்ணுடன் சுசீந்திராவுக்கு தொடர்பு இருப்பதாக நினைத்துக்கொண்டு, இருவரையுமே சத்யா தாக்கினாராம்.