நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் சார்பில் இரு முறை போட்டியிட்ட அனுபவம் கொண்ட மா.கி. சீதாலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கின்றது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. நேற்று வரை 9 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2024-ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், சீதாலட்சுமி போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரகுமார் போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த மா.கி. சீதாலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பிரதான கட்சிகள் போட்டியிடாத நிலையில், திமுக – நாம் தமிழர் இடையே இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.