திருமாவளவன் முதலமைச்சர் கனவு குறித்த கேள்விக்கு.. “ஆசையே அலை போலே… ” பாடல் பாடி ஜெயக்குமார் பதில்..!

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே என பாட்டு பாடி பதிலளித்த ஜெயக்குமார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக கள ஆய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கள ஆய்வு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தனக்கும் முதலமைச்சர் கனவு இருப்பதாகவும் அதற்கான மையப் புள்ளிகள் அமையவில்லை என கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விக்கு ஜெயக்குமார் அவர்கள், ‘ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே என தொல் திருமாவளனை பாட்டு பாடி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”கனவு காணுங்கள் என அப்துல் கலாம் கூறியது போன்று எல்லோரும் கனவு காணலாம். அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், பழனியில் , தனியார் திருமண மண்டபத்தை திறந்துவைத்து தொல் திருமாவளவன் பேசினார். அப்போது, நானும் முதலமைச்சராக வேண்டும், எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு என்று 20 வருடங்களுக்கு முன்பாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் வந்த செய்தியை சுட்டிக் காட்டினார்.

அதற்காக இன்று முதல் புள்ளியை வைத்துள்ளோம் இன்னும் கோலங்கள் போட பல புள்ளிகள் தேவைப்படுகிறது , ஒரு புள்ளி வைத்துக் கொண்டு கோலம் போட முடியாது நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைக்க வேண்டும் அடி எடுத்து வைத்தவுடன் ஆட்சியில் வென்றுவிட முடியாது இப்போது பலர் கட்சி ஆரம்பித்து உடனே முதலமைச்சர் கனவோடு இருக்கிறார்கள் என தொல் திருமாவளவன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.