ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..! காங்கிரஸ் பாஜக இடையே கடும் மோதல் ..!

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின. பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில் இந்த 2 கட்சிகள் தவிர இந்திய தேசிய லோக் தளம் – பகுஜன் சமாஜ் கூட்டணி, ஜனநாயக ஜனதா கட்சி – ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி என நான்கு முனை போட்டி நிலவியது.

இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்ப நிலவரத்தின்படி காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 40 தொகுதிகளிலும், பாஜக 44 தொகுதிகளிலும் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது. ஹரியானாவில் ஜூலான் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.