அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சியான ஜன் சூராஜ் கட்சியை பாட்னாவில் தொடங்கினார். கடந்த ஓராண்டாக நடைபயணம் மேற்கொண்டு வந்த நிலையில் கட்சி பெயரை பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். 2025 சட்டப்பேரவை தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி போட்டியிடும் என பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
ஜன் சூராஜ் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, “நீங்கள் அனைவரும் ‘ஜெய் பீகார்’ என்று சத்தமாகச் சொல்ல வேண்டும், உங்களையும் உங்கள் குழந்தைகளையும் யாரும் ‘பிஹாரி’ என்று அழைக்க மாட்டார்கள், அது துஷ்பிரயோகம் போல் உணர்கிறது. உங்கள் குரல் டெல்லியை அடைய வேண்டும்.
அது பீகாரைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்ட மேற்கு வங்காளத்தை அது சென்றடைய வேண்டும். தமிழ்நாடு, டெல்லி மற்றும் பம்பாய் எங்கும் பிஹாரி குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தாக்கப்பட்டனர்” என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.