கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 2 மடங்கு அதிகரிப்பு

தமிழகம் கடந்த 10 ஆண்டுகளாகவே மெல்ல மெல்ல போதைப் பழக்கத்தில் சிக்கி சின்னா பின்னம் ஆகி கொண்டுள்ளது. பல ஆண்டுகளாகவே தமிழக அரசுக்கு போதைப் பொருட்கள் விற்பனையின் மூலமே நிதி வந்து கொண்டுள்ளது என்பதால் தமிழக அரசே போதைப் பொருட்கள் விற்பனையை நம்பியே அரசு சக்கரம் சுழன்று கொண்டுள்ளது.

படித்தவன் முதல் படிக்காதவன் வரை , ஏழை முதல் பணக்காரன், அரசு அதிகாரி முதல் கூலி தொழிலாளி வரை , அரசியல் கட்சி தலைவன் முதல் அடிமட்ட வரை தொண்டன் பொது இடங்களில் நாளைய சமுதாயம் கொட்டு சீரழிந்து விடும் என்ற எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போதைப் பொருட்களை பயன்படுத்தியத்தின் விளைவு இன்றைய தலைமுறையினரின் வாழ்க்கை இன்று கேள்வி குறியாக மாறியிருக்கின்றது.

தமிழகத்தில் பல சட்டங்கள் வெறும் எழுத்தளவில் மட்டுமே இன்றைக்கு சிகரெட், மது, புகையிலை எல்லாமே எளிதாகக் கிடைத்து விடுகின்றன. 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குப் புகையிலைப் பொருள்களை விற்கக் கூடாது!’ ஆனால், பள்ளியில் படிக்கும் சிறுவன் புகைப்பிடிப்பதை நாம் பார்க்கிறோம். `பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது’ ஆனால், தமிழகத்தில் தெருவுக்குத் தெரு பெட்டிக்கடைகள், சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுகின்றார்கள. திருமணத்தின்போது மனமேடையே மாப்பிள்ளையிடமே, `மச்சி… எப்போ, எங்கே பார்ட்டி?’ என்பது கேட்கும் கலாசாரம்.

போதைப் பழக்கம் தமிழகத்தில் சாதாரணமாக அதாவது வெத்து கெளரவத்திற்கு தொடங்கி இன்று கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் சிறார்கள் ஈடுபடும் அளவிற்கு திசைமாறி நிற்கின்றது. தமிழகத்தில் கொலை வழக்குகளில் சிக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 2016-ம் ஆண்டு முதல் படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற கொலைகளில் 48 சிறார்கள் குற்றம் சாட்டப்பட்டனர். 2017-ல் 53 சிறார்களும், 2018-ல் 75, 2019-ல் 92 என அதிகரித்து 2020-ல் 104 சிறார்கள் கொலைவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சென்னை, திருச்சி, மதுரை, திருவள்ளூர், திருப்பூர், பெரம்பலூர், தூத்துக்குடி, சிவகங்கை, மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடந்த கொலை வழக்குகளில் சிறார்கள் அதிக அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் பல பெற்றோர் தன குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி அவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக மாறுவது மட்டுமின்றி சமுதாயத்திற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதை எண்ணி நித்த நித்தம் வேதனை பட்டுக்கொண்டுள்ளனர். இன்று தமிழகத்தை ஆளும் திமுக இன்றைய போதைக் கலாசாரத்திற்கு முடிவு கட்டுமா? இல்லை முந்தைய அதிமுக அரசு போல வக்கணையாக பேசிக்கொண்டு மௌனமாக ஏழை, எளிய மக்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்குமா?