23 வயது பெண் 7 மாதங்களில் 25 கணவன்கள்..!! கான்ஸ்டபிளை 26-வது திருமணத்திற்கு ரெடியான பெண் கைது..!

23 வயது பெண் 7 மாதங்களில் 25 கணவன்கள் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என்று ஒவ்வொரு மாநிலங்களாக சென்று திருமண செய்து நகை, பணம் என கையில் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓட்டம் பிடித்து கடைசியாக போபாலில் கான்ஸ்டபிளை 26-வது திருமணம் செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூரை சேர்ந்த 47 வயது மடோனா என்ற பெண், மனைவியை இழந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு, அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு மட்டுமே குறி வைத்து ஏமாற்றி வந்துள்ளார். சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களிடம் நெருங்கி பழகி, அவர்களையே திருமணம் செய்து கொண்டு நகை, பணம், சொத்துக்களை அபகரித்துவிடுவாராம். பல ஆண்களை ஏமாற்றிய மடோனா நேற்று கைதாகி தமிழகத்தில் பேசுபொருளாக மாறியது. ராஜஸ்தானில் அனுராதா ஹேக் என்ற பெண் இன்று பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளார்.

ராஜஸ்தானை சேர்ந்த 23 வயதாகும் அனுராதா ஹேக் மேட்ரிமோனியல், திருமண புரோக்கர்களை அணுகி, வசதியான ஆண்களுக்கு வலையை விரிப்பவராம். தன்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் ஆண்கள் என்றால், உடனே அவர்களுடன் சட்டப்படி பதிவு திருமணமும் செய்து கொள்வாராம். பதிவு திருமணம் செய்வதால், யாருக்கும் அனுராதா மீது சந்தேகம் வருவதில்லை. திருமணம் முடிந்து சில நாட்களில் நகை, பணம், சொத்துக்களை அபகரித்து, அதற்கு பிறகு அந்த வீட்டிலிருந்து கிளம்பி சென்றுவிடுவாராம். அதுவும் 7 மாதங்களில் இதுவரை 25 பேரை திருமணம் செய்துள்ளார்.

இப்படி பலரும் ஏமாந்துபோன நிலையில், சவாய் மாதோப்பூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு சர்மா என்ற நபர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் தந்துள்ளார். இந்த புகாரை விசாரிக்க சென்றபோதுதான், அனுராதா ஹேக்கின் அனைத்து தில்லாலங்கடி வேலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. காவல்துறையினர்அனுராதா ஹேக்யை தேடி செல்வதற்குள், போபாலில் ஒரு காவல்துறை கான்ஸ்டபிளை திருமணம் செய்ய முயன்று கொண்டிருந்து போது அனுராதா ஹேக்யை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அதன் பிறகு அனுராதா ஹேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என்று ஒவ்வொரு மாநிலங்களாக சென்று திருமண மோசடி செய்துள்ளதாக தெரிவித்து காவல்துறையினருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.