திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர்மன்றக் அரங்கில் முதல் நகர சபை கூட்டம் நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நகர்மன்றத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆணையாளர் ராமர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நேற்றைய முன்தினம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராட்சி 30 வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளான குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு குப்பை அகற்றுதல், சாலைகளை சீரமைத்தல், உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடியாக ஒரு வாரத்திற்குள் தீர்வு எடுப்பதாக நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மன்றக் கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.
மேலும் அந்த கூட்டத்தில் பேசிய நகர்மன்றத் தலைவர் பாப்பு கண்ணன் கடந்த 10 ஆண்டுகளில் நகராட்சியில் அடிப்படை தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் அதிமுக ஆட்சி மெத்தனமாக செயல்படுவதாக தெரிவித்து மட்டுமின்றி வருங்காலங்களில் தாராபுரம் நகராட்சியை தூய்மையாக ஆக்கப்பட்டு படிப்படியாக அனைத்தும் வார்டுகளிலும் தேவைகளை பூர்த்தி செய்வதே எனது குறிக்கோள் எனதெரிவித்தார்.
அதுமட்டுமின்றி நகராட்சியில் எந்தவித பணம் இல்லாததால் உடனடியாக வருவாயைப் பெருக்க அனைத்து உறுப்பினர்களும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து 9-வது வார்டு முதல் 30-வது வார்டு வரை உள்ள உறுப்பினர்களை அந்தந்த வார்டு குறைகளை கேட்டறிந்தார் அப்போது பேசிய 22-வது வார்டு உறுப்பினர் அதிமுக நாகராஜ் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித அடிப்படை தேவைகளும் நடைபெறும் என்று தெரிவித்தார்கள் திமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் நிறைவடைந்து தற்பொழுது 10-வது மாதத்தை எட்டியுள்ளது இருந்தும் 10 மாதங்களாக ஏன் எந்தவித நடவடிக்கையும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து குறுக்கிட்ட 21-வது வார்டு உறுப்பினர் துறை சந்திரசேகர் கடும் ஆட்சேபனை தெரிவித்து இதற்கு திமுக உறுப்பினர்கள் 1-வது வார்டு உறுப்பினர் ராஜேந்திரன் 23-வது வார்டு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்ட திமுக உறுப்பினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கடந்த அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது இதற்கு காரணம் என்றும் மெத்தனமாக கையாலாகா அரசு என்றும் திமுக உறுப்பினர் பேசியதால் கூட்டத்தில பரபரப்பு ஏற்பட்டது.