ஹிந்தி, பிரஞ்சு, ஆங்கிலம் இதை விட தமிழ் மொழி பழமையான மொழி…! உங்கள் ஈகோ அதிகமாகிவிட்டது…!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த மன்சூர் அலிகான், “த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.

குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். மிஸ் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மன்சூர் அலிகான் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் பெரும்பாலானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ, அவரது எக்ஸ் தளத்தில், “இவர்கள் தாங்கள் செய்த தவறுகளை மறைக்க மற்றவர்களின் தவறுகளை உதாரணங்களாக காட்டி தங்கள் செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்கிறார்கள். மற்றவர்களை குறை சொல்லும் முன் முதலில் உங்களை நீங்களே எண்ணிப்பாருங்கள் மன்சூர் அலிகான். உங்கள் ஆணவமும், எதிர்ப்பு மனப்பான்மையும் நீங்கள் எத்தகைய ஆணாதிக்க, அகங்காரம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

இதிலிருந்து விடபட முடியும் என நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும், அது முடியாது. மன்னிப்பு கேட்பதால் உங்கள் ஆண்மையின் அடையாளம் பறிபோகாது. மாறாக உங்கள் வீட்டு பெண்களுக்கு கண்ணியத்தைக் கொடுக்கும். நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை போலவே தனிப்பட்ட முறையில் இருந்திருக்கலாம். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் இணையவாசி ஒருவர் குஷ்புவிடம் சரமாரியாக கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதில் எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு, ‘திமுக குண்டர்கள் இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறார்கள். இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வர இன்றுவரை குஷ்பூ மன்னிப்பு கேட்கவில்லை இதற்கு மறக்க குஷ்பூ புதிய விளக்கத்தை கொடுத்தார்.

இந்நிலையில், காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில், வேளச்சேரி, செம்மஞ்சேரி தமிழ்நாட்டில் தான் உள்ளது. தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் குறிவைத்து விட்டீர்கள். சேரியிலும் தமிழ் மட்டுமே பேசுவார்கள், தமிழின் பாரம்பரியம். இப்போது தமிழ் மொழியையே இழிவுபடுத்தி விட்டீர்கள்.

செரி (தொழிலாளர்கள்), மீனவர்கள், விவசாயிகள், காவல்துறை/ ராணுவம் தமிழகத்தின் இந்தியாவின் 4 தூண்கள். அவர்கள் இல்லாமல் நம் நாடும் நம் அரசும் இயங்காது. ஹிந்தி, பிரஞ்சு, ஆங்கிலம், இதை விட தமிழ் மொழி குறைவாக இல்லை. தமிழ் பழமையான மொழி, மதிக்கப்படும் மொழி. உங்கள் ஈகோ அதிகமாகிவிட்டது. அது பாஜக நிலைப்பாடாக இருக்கலாம்.

பிஜேபி இந்தி மற்றும் இப்போது பிரஞ்சு போன்றவற்றை ஊக்குவிக்கிறது. சமூக நீதி, சமத்துவம் நம் அனைவருக்கும் தேவை. இத்தகைய பேச்சு வேறுபாடுகளையும் வெறுப்பையும் மட்டுமே கொண்டு வரும். இதை நான் கண்டிக்கிறேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.