திண்டுக்கல் சீனிவாசனிடம் இதெல்லாம் ஏன் என்ற தொனியில் மிகவும் கோபமாக எடப்பாடி பழனிசாமி அவரிடம் சைகை காட்டினார். ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் வாழை மரம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டு இருந்தன. எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்த போது அங்கு இருந்த தொண்டர்கள் புரட்சித் தலைவியின் புகழ் ஓங்குக, எடப்பாடி வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், 77 கிலோ பிரமாண்ட கேக்கினை எடப்பாடி பழனிசாமி வெட்டினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கேக் வழங்கினார். பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதிமுக சார்பு அணிகள் சார்பில் மருத்துவ முகாம், அன்னதானம் ஆகியவையும் நடைபெற்றது. இதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் அதிமுக அலுவலகத்திற்கு வந்து இருந்தனர். மேலும் தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கி அவரது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா புகைப்படத்தை முகப்பாக கொண்ட புத்தகம் ஒன்றை அளித்தார். முகம் மாறிய எடப்பாடி இதை கவனித்த எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்வது போல ரியாக்ட் செய்தார். ஆனாலும் திண்டுக்கல் சீனிவாசன் விடாமல் அந்த புத்தகத்தை வழங்க வந்ததால் சற்று முகம் மாறிய எடப்பாடி பழனிசாமி, புத்தகத்தை வாங்கி அருகில் இருந்த கேபி முனுசாமியிடம் ஒப்படைத்தார். திண்டுக்கல் சீனிவாசன் ஏதோ சொல்லவர அதையும் காதில் போட்டுக்கொள்ளாததை போல அங்கிருந்து சட்டென நகர தயாரானார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.