“வாட்ஸ்அப்பில் உல்லாசமாக இருக்க பெண் தேவையா..!?” மெசேஜ் அனுப்பி பண மோசடி..!

தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள பிரைவேட் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு கடந்த 13-ந்தேதி, “உல்லாசமாக இருக்க பெண் தேவையா?” என்று கேட்டு மெசேஜ் வந்துள்ளது. அத்துடன், அந்த மெசேஜில் நம்பர் ஒன்றும் தரப்பட்டிருந்தது. எனவே, இந்த மேனேஜர், அதிலுள்ள நம்பருக்கு போன் செய்துள்ளார்.

அப்போது மறுமுனையில் பேசிய பெண், 5க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடைய போட்டோக்களை அனுப்பி, இதில் யாராவது ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்றாராம். விக்னேஷும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை விக்னேஷ் தேர்வு செய்து அனுப்பி உள்ளார். பிறகு ஒரு இரவுக்கு 10 ஆயிரம் ரூபாய் ரேட்பேசி முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை ஜிபே மூலமாக அந்தப்பெண் பெற்றுள்ளார். பிறகு, முத்தியால்பேட்டையில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு வந்து காத்திருக்கும்படி அப்பெண் கூறியிருக்கிறார்.

இதனால் ஆசை ஆசையாக, விக்னேஷ் அங்கு சென்றும்கூட, அந்த பெண் வரவில்லை. இப்படியே 5 மணி நேரம் அதே இடத்தில் காத்து நின்றார். அதற்கு பிறகுதான் தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை விக்னேஷ், உடனடியாக சைபர் கிரைமிற்கு சென்று புகார் தந்தார்.

இதையடுத்து, சைபர் கிரைம், வங்கி கணக்கு மற்றும் அவர் தொடர்பு கொண்ட எண் ஆகியவற்றை வைத்து, சம்பந்தப்பட்ட பெண் யார் என்று விசாரணை மேற்கொண்டபோதுதான் கடலூரை சேர்ந்த காயத்ரி சிக்கினார். கடந்த 6 மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என 4 லட்சம் ரூபாய்க்கு மேல் வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

சோஷியல் மீடியாவில் இன்ஸ்டாகிராமில் பெண்களின் போட்டோக்களை டவுன்லோடு செய்துக்கொண்டு, இப்படியான மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறையினடம் ஒப்புக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவரை, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.