வாடகை செலுத்தாததால் நகராட்சிக்கு காய்கறி கடைக்கு ‘சீல்’ வைப்பு

அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான காந்தி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 52 கடைகள் உள்ளன. அதில் பல கடை உரிமையாளர்கள் வாடகை பாக்கி அதிகளவில் வைத்துள்ளதால் அவர்களுக்கு நேரடியாகவும், கடிதம் மூலமும் பலமுறை தகவல் நகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, நிலுவைத்தொகை கட்டத்தவறினால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்பின்னர் ஒரு கடையின் உரிமையாளர் தவிர மற்ற அனைவரும் நிலுவைத்தொகையை செலுத்தி விட்டனர். ஆகையால், வாடகை செலுத்தாத கடைக்கு நகராட்சி ஊழியர்கள் அந்த கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.