வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தீர்மானம் நிறைவேற்றினார். நேற்று தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்திற்கு பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில், சென்னை திருவான்மியூரிலுள்ள ஸ்ரீஇராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்களுக்கு 22 வகையான சைவ உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெகவின் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தொகுதி மறுசீரமைப்பு அதேபோல் பெண்கள் பாதுகாப்பு, டாஸ்மாக் ஊழல் தொடர்பாகவும், அரசாங்க ஊழியர்கள் போராட்டம், சட்ட ஒழுங்கு பிரச்சினை, தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்றும், இரு மொழி கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேறியுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பே நடத்த வேண்டும், அதுவே ஒரே தீர்வாக இருக்கும் என்று, சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், கொள்கை தலைவர்கள் வழியில் பயணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு வாரிய திருத்த சட்டம் குறிப்பாக வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.