தர்மபுரி மாவட்டம், நடுப்பட்டி மற்றும் அக்கமனஅள்ளி பகுதிகளில் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ஒரு லாரியில் செம்மண் ஏற்றிக் கொண்டிருந்தனர். அலுவலர்களை பார்த்தவுடன் அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய போது, உரிய அனுமதியின்றி செம்மண் எடுப்பது தெரியவந்தது. இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து லாரி மற்றும் அதில் கடத்தப்பட்ட செம்மண்ணை பறிமுதல் செய்தனர்.