லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில்: ரயில் ஒட்டுநர் லோகோ பைலட் கவனக்குறைவால் பறிபோன உயிர்..!

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அடிக்கடி ரயில் விபத்துக்கள் நடந்து வரும் நிலையில், ரயில்வே துறை கூடுதல் கவனம் செலுத்தி ரயில் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பீகார் மாநிலம் பரவுனி சந்திப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

அமர் குமார் ராவ் என்ற ரயில்வே ஊழியர் இன்ஜினுடன் பெட்டியை இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக இரண்டுக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். ரயில் ஒட்டுநர் லோகோ பைலட் இன்ஜினை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால் அமர் குமார் ராவ் பலியானது நாட்டு மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி யுள்ளது.