ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 3 மாநில பெண்கள் பங்கேற்பு

அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024-ம் ஆண்டிற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 4- ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆட்சேர்ப்பு முகாமையொட்டி விளையாட்டரங்கம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு முகாம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை நடைபெறுகிறது. கடந்த 4-ம் தேதி முதல் நடைபெற்ற முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று பெண்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 3 மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.