மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த 8 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் இமாலய வெற்றி மம்தா பானர்ஜி முதலமைச்சரானார். ஆனால் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.
அதனால், மம்தா பானர்ஜி 6 மாதங்களுக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்க வேண்டும் என்ற சூழலில், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பவானிபூர், சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வந்த நிலையில் மம்தா பானர்ஜி பவானிபூர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றார்.