திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கோவை தலைமை இடமாகக் கொண்ட மேரியோ ஜூஸி என்ற உணவு கடை செயல்பட்டு வருகிறது. இந்த மேரியோ ஜூஸி கடை தமிழக முழுவதும் 40-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தாராபுரத்தில் புதிதாக துவங்கப்பட்டு மேரியோ ஜூஸி கடையில் ஒரு சிக்கன் வாங்கினால் ஒரு சிக்கன் இலவசம் போண்ற பல இலவச சலுகைகள் அறிவித்து மக்களை கவர்ந்து வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று அப்துல் ரகுமான் மற்றும் ஆசாத் குடும்பத்தினர் மேரியோ ஜூஸி கடைக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் ஜூஸ் மற்றும் சிக்கன் வகைகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்ட போது, சிக்கனில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிரிச்சியடைந்த அப்துல் ரகுமான் மற்றும் ஆசாத் குடும்பத்தினர் கடையில் பணியாற்றிய ஊழியர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், ஊழியர்கள் முறையான பதில் அளிக்காததால் கோபமடைந்த அப்துல் ரகுமான் மற்றும் ஆசாத் குடும்பத்தினர் மேரியோ ஜூஸி கடையின் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல வகைகள் மற்றும் இறைச்சி வகைகளும் துர்நாற்றம் வீசியது மட்டுமின்றி பூசணம் பிடித்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இந்த மேரியோ ஜூஸி கடையில் பல ஆபர்களைத் தந்து பொதுமக்களை கவர்ந்து கெட்டுப்போன பல வகைகள், சிக்கன் மற்றும் இறந்து பல நாட்களான கோழிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வடிக்கையாளர்களுக்கு வழங்கியது தெரிய வந்தது. இந்த சம்பவம் காட்டு தீயைப்போல பரவ செய்தியாளர்கள் மேரியோ ஜூஸி கடைக்கு விரைந்தனர். இத்தனை தொடர்ந்து ஆசாத் என்பவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேரியோ ஜூஸி கடை புதிதாக தொடங்கப்பட்டதால் ஆசை ஆசையாக குடும்பத்துடன் சாப்பிட வந்தோம். இங்கு வந்து சிக்கன் வகைகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்ட போது, சிக்கனில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கடையின் சமையல் அறைக்கு சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல வகைகள் மற்றும் இறைச்சி வகைகளும் துர்நாற்றம் வீசியது மட்டுமின்றி பூசணம் பிடித்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கெட்டுபோனதை மறைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் இனிமேல் இதுபோன்று உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் பொதுமக்களை பாதிக்காத வண்ணம் இவர்கள் மீது அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தகவலறிந்த தாராபுரம் காவல்துறை சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாகியும் சம்பவ இடத்திற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வராததால் பொது மக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.