ஆளுகை, கல்வி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் மாற்று அரசியல் பாதைக்கு இளைஞர்களை தயார்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என அவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மாணவர் அமைப்பை அறிவித்துள்ளார். இந்தப் புதிய அமைப்பின் பெயர் “மாற்று அரசியலுக்கான மாணவர் சங்கம்” (ASAP).
அரவிந்த் கெஜ்ரிவால், ASAP-ஐ கல்லூரி வளாகத்திலிருந்து மாற்றங்களைத் தொடங்குவதற்கான மாணவர் இயக்கம் என்று விவரித்தார். பாரம்பரிய கட்சி அரசியலுக்குப் பதிலாக, ஆளுகை, கல்வி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் மாற்று அரசியல் பாதைக்கு இளைஞர்களை தயார்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என அவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மேலும் ஆம் ஆத்மியின் தற்போதுள்ள இளைஞர் பிரிவான சத்ரா யுவ சங்கர்ஷ் சமிதி (CYSS), டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. இருப்பினும், பாஜக மற்றும் காங்கிரஸ் அரசியலின் கொள்கைகளுக்கு எதிராக அணிதிரள்வதில் ASAP அதிக கவனம் செலுத்தும் என்றும், அதே நேரத்தில் CYSS அதன் செயல்பாடுகளைத் தொடரும் என்றும் ஆம் ஆத்மி தெளிவுபடுத்தி உள்ளது.
டெல்லியில் புதிய மாணவர் அமைப்பை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக, டெல்லி பல்கலைக்கழகங்களில் உறுப்பினர் பிரச்சாரத்தைத் தொடங்கவும் கட்சி முடிவு செய்துள்ளது. மாநிலத்திற்கு வெளியே அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்வேன் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.