மல்லிகார்ஜூன கார்கே: ஹரியானா தேர்தல் முடிவுகள் மக்களின் விருப்பத்தை ஜனநாயகமற்ற முறையில் நிராகரிப்பு..!

ஹரியானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தேர்தல் அதிகாரிகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், ஹரியானா தேர்தல் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாதது என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘‘காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ் மற்றும் பவன் கேரா ஆகியோர் ஹரியானா மாநில தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என பேசி உள்ளனர். இத்தகைய பேச்சுக்கள் மக்களின் விருப்பத்தை ஜனநாயகமற்ற முறையில் நிராகரிப்பதாக உள்ளது. இவை பேச்சு சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டவை.

இதுபோன்ற கருத்துக்கள் ஜனநாயக அமைப்பில் கேட்கப்படாதவை. நாடு முழுவதும் அனைத்து தேர்தலிலும் பயன்படுத்தப்படும் ஒரே மாதிரியான சட்டப்பூர்வ நடைமுறை ஹரியானா, ஜம்மு காஷ்மீரிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது’’ என கடுமையாக மல்லிகார்ஜூன கார்கே கண்டித்துள்ளது.