மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கின் கான்டிபிட்டாவில் உள்ள நியூ லைஃப் சர்ச்சில் ரெவ் திமோதி ஜோஷி பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவரும், இவரது கூட்டாளிகள் சிலரும் நாகலாந்து மாநிலம் திமாபூரை சேர்ந்த ஒரு பெண்ணிடம் அதிர்ஷ்டம் தரும் ஒரு மந்திர பெட்டியை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
அதை நம்பிய அந்த பெண்ணும் கடந்த 2019, 2020-ம் ஆண்டுகளில் பாதிரியார் ரெவ் திமோதி ஜோஷி கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.3.5 கோடி வரை பணம் டெபாசிட் செய்துள்ளார். இதையடுத்து பாதிரியார் ரெவ் திமோதி ஜோஷி பெட்டி ஒன்றை கொடுத்துள்ளார். ஆனால் பெண்ணிடம் கொடுத்து மந்திர பெட்டியால் எதுமே நடக்காததால் பாதிரியார் ரெவ் திமோதி ஜோஷி தன்னை ஏமாற்றியுள்ளார் என்பதை உணர்ந்துள்ளார்.
ரூ.3.5 கோடி பணம் போச்சே என்றால் ஆதங்கத்தில் திமாபூர் காவல் நிலையத்தில் நடந்ததை கூறி புகார் மனு கொடுத்துள்ளார். பாதிரியாரிடம் பணம் கொடுத்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் பாதிரியார் ரெவ் திமோதி ஜோஷி மற்றும் அவரின் சகோதரனை திமாபூர் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.