மதிமுக தேர்தல் அறிக்கை: விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்..!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ம.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் வெளியிட்டார்.
மதிமுக தேர்தல் அறிக்கையில்,
1. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி முறை நிலவ வேண்டும்.
2. தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
3. திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.
4. புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யவும், சுங்கச்சாவடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
5. மத்திய பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வலியுறுத்தப்படும்.
6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்ட 200 நாட்களாக உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
7.நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்.
8. ஒரேநாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம்.
9. கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
10. விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்படும்.
போன்ற சிறப்பு 74 அம்சங்களுடன் மதிமுக தேர்தல் அறிக்கையில் அடங்கியுள்ளது.