மகளுடன் நிச்சயதார்த்தம்..! மாமியாருடன் ஓட்டம் பிடித்த இளைஞர்..!

சின்ன பொண்ணு வேணாம் மாமா..! பெரிய பொண்ணும் வேணாம் மாமா..! அத்தை மட்டும் போதும் மாமா..!! என்ற பாடல் வரிகளை போல  மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்த இளைஞரை தனக்கு பிடித்துள்ளதாகவும், அவரை காதலிப்பதாகவும் அவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் எனக் கூறிய காவல் நிலையத்தையே கதிகலங்க வைத்த சம்பவம் இன்று சமூக வலைத்தளங்களில் நாடு முழுவதும் பேசு பொருளாகி வருகின்றது.

உத்திரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த சப்னா தேவி தனது மகளுக்கு ராகுல் என்ற வாலிபரை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். பெண் பார்க்கும் படலம் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிவடைந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்தபோது சப்னா தேவி மாயமானார். அவர் மாயமான ஆறாம் தேதியே ராகுலும் மாயமானார். விசாரித்த போது தான் வீட்டிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் சப்னா தேவி தனது மகளுக்கு நிச்சயத்தை இளைஞருடன் ஓடியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சப்னா தேவியின் கணவரான ஜிதேந்திர குமார் இது குறித்து அலிகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனது மருமகனுடன் தனது மனைவி வீட்டில் இருந்த நகை பணத்துடன் மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். இந்நிலையில் நேபாளம் எல்லையில் பீகாரின் சீதாமருங்கி பகுதியில் இருவரும் தங்கி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறை அவர்களை பிடிக்க சென்ற நிலையில் அவர்களாகவே உத்தரப் பிரதேச காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தனது மருமகன் ராகுலுடன் காதல் ஏற்பட்டதாகவும் திருமணத்திற்கு முன்பு இருவரும் அதிக நேரம் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் தனது மகளுக்கு பார்த்த நபருடன் தனக்கு காதல் ஏற்படும் என யோசிக்கவில்லை என கூறி இருக்கிறார். எனது மருமகன் நகைகளை எடுத்துச் செல்லவில்லை. வீட்டில் இருந்து செல்போனையும் 200 ரூபாய் பணத்துடன் மட்டுமே தான் சென்றதாக கூறியுள்ளார்.

மேலும் குடிகாரரான கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னிடம் தகராறு செய்தாளராகவும், தனது மகளும் தன்னை திட்டிக் கொண்டே இருந்த நிலையில் தொலைபேசியில் பேசிய ராகுல்தான் ஆறுதலாக இருந்தார். என்ன நடந்தாலும் பரவாயில்லை இனிமேல் நாம் ஒன்றாக வாழ்வோம் என கூறி வீட்டை விட்டு சென்றதாகவும் இனி அவர்தான் தனது வாழ்க்கையில் என தெரிவித்தார்.