நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கு உற்பட்ட வடுகபட்டியில் கடந்த பல ஆண்டுகளாகவே இரு தரப்பினர் இடையே விரோத போக்கு நடைபெற்ற நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிர் பலி வாங்கும் அளவிற்கு விபரீதமானது. அதன்பின்னர் பல ஆண்டு காலம் பொதுமக்கள் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சேந்தமங்கலம் காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
அதனைத்தொடர்ந்து சிறுசிறு சம்பவங்கள்அவ்வப்போது நடந்த வண்ணமே உள்ளது. 2021 புத்தாண்டு கொண்டாத்தின்போது மீண்டும் மோதல் வெடிக்க இதனைத்தொடர்ந்து மீண்டும் பகை மூண்டது. இந்நிலையில் ஒரு தரப்பினர் குறித்து மற்றொரு தரப்பினர் தரக்குறைவான வார்த்தைகள் பேசி வாட்ஸ் ஆஃப் வெளியிட அது பூதாகரமான நிலையில் காவல் நிலையம் செல்ல முயற்சி செய்தபோது வாட்ஸ் ஆஃபில் தரக்குறைவான வார்த்தைகள் பேசி வெளியிட்டவர்கள் பெற்றோர் பிள்ளைகள் தெரியாமல் தவறு செய்து விட்டனர் நீங்கள் புகார் கொடுத்தால் எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் இனிது போன்று பார்த்து கொள்கின்றேன் என்ன கோட்டுக்கொள்ள பாதிக்கபட்ட சமுதாயத்தினர் பெருந்தன்மையாக நடந்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஆங்கில புத்தாண்டு ஆண்டு அன்று ஒரு தரப்பு இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துகள் சாலையில் எழுதி உள்ளனர். அன்று இரவு மற்றொரு தரப்பு ஜாதி சங்க கொடியை யாரோ ஒரு சில சமூக விரோதிகள் கிழித்துள்ளனர் இந்த செயல் மற்றொரு தரப்பிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அன்று இரவு வாழ்த்துகள் சாலையில் எழுதிய கல்லூரி மாணவர்கள் சிலர் மீதி பஞ்சாயத்து துணை தலைவர் மற்றும் ஜாதி சங்க தலைவர் தூண்டுதலின் பேரில் புகார் கொடுத்து அழுத்தம் கொடுத்தனர்.
இதன்விளைவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் அவர்கள் உடனடி கைது செய்ய அழுத்தம் கொடுக்க சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஷ் அவர்கள் எதுவும் விசாரிக்காமல் நள்ளிரவில் தீவிரவாதிகளை கைது செய்வதை போல கைது செய்தார். கடைசியில் ஜாதி சங்க கொடியை கிழித்தவரே குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளனர். ஆனால் சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தை விசாரிக்காமல் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் உத்தரவிட சேந்தமங்கலம் காவல் ஆய்வாளர் சதீஷ் நள்ளிரவில் தீவிரவாதிகளை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.