பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணின் வீட்டிற்கு ரூ.20 லட்சம் கரண்ட் பில்..! ஆடிப்போன குடும்பத்தினர்..!

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், பிஜினேபள்ளி மண்டல், கானாபுராவைச் சேர்ந்த வேமரெட்டி. இவரது வீட்டில் 0.60 கிலோவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால், 21 கோடி ரூபாய்க்கு கரண்ட் பில் வந்துவிடடது. வெறும் 297 யூனிட்கள் பயன்படுத்தப்பட்டதற்கு ரூ.21,47,48,569 கரண்ட் பில்? என்று வேமரெட்டி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இதுகுறித்து புகார் சொன்னார்.

அப்போதுதான் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டணம் அதிகமாக வந்துவிட்டதாகவும், நுகர்வோர்கள் அளித்த புகாரின் பேரில் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இதற்கு பிறகுதான், வேமரெட்டிக்கு நிம்மதியே வந்தது. தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் அடங்கும் முன்னே இப்போது குஜராத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம், காந்தி நகர் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பங்க்திபென் படேல் நவ்சாரியில் உள்ள  பெண்ணின் வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20 லட்சம் வந்திருக்கிறதாம். இதை பார்த்து மொத்த குடும்பத்தினரும் நிலைகுலைந்து போய்விட்டார்கள். இது குறித்து பங்க்திபென் சொல்லும்போது, “எங்கள் வீட்டில் 4 பேர் மட்டுமே இருக்கிறோம். எங்கள் வீட்டில் 4 பல்ப், 4 ஃபேன், 1 பிரிட்ஜ், 1 டிவி மட்டுமே இருக்கிறது. வழக்கமாக 2 மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் முதல் 2,500 வரைதான் கரண்ட் பில் வரும். இந்த முறை ரூ.20,01,902 வந்திருக்கிறது. ஒன்னுமே புரியல” என்கிறார்.

இதற்கு பிறகு, குஜராத் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் புகார் பதிவு செய்யுமாறு சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே, பங்க்தபென் புகார் பதிவு செய்ததையடுத்து, மின்வாரிய அதிகாரி இது தொடர்பாக மதிப்பாய்வு செய்துள்ளனர். அப்போதுதான் மின் மீட்டரில், ரீடிங் தப்பாக கணக்கெடுக்கப்பட்டது தெரியவந்தது.. பிறகு, அடுத்த 1 மணி நேரத்தில் மின் கட்டணமும் சரிசெய்யப்பட்டது. இதற்கு பிறகுதான், பங்க்திபென் குடும்பத்தினருக்கு நிம்மதியே வந்தது.