திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள தேர்பட்டியில் பாண்டியன் என்பவர் வீடு கட்ட வேண்டி பணம் எட்டு லட்சத்தை தனது பொலிரோ காரில் எடுத்து கொண்டு புதிய வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். ஆனால் பாண்டியன் புதிய வீட்டிற்கு சென்று காருக்கு திருப்பிய போது காரில் இருந்த ரூபாய் எட்டு லட்சம் காணமால் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பாண்டியன் அருகிலுள்ள அலங்கியம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை கூறி புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் அவர்களின் உத்தரவின்பேரில் தாரபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கலையரசன் மேற்பார்வையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் அவர்களின் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், சுந்தரராஜ் காவலர்கள் கார்த்திக், கலைச்செல்வன்ம், பாலசுப்பிரமணியன், ராமர், ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக CCTV கேமரா ஆய்வு செய்தனர் அப்போது பழங் குற்றவாளியின் புகைபடம் ஒப்பிடு செய்த போது கர்நாடக மாநிலம், ஷிமோகா மாவட்டம், மல்லகுப்பாத்தை சேர்ந்த முத்தப்பா மகன் சின்னராஜ் என்பது தெரியவந்தது. இவன் கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் மும்பை போன்ற பகுதிகளில் கைவரிசை செய்தது தெரியவந்தது. சின்னராஜியை கைது செய்த தனிப்படை அவனுடன் இருந்த பணத்தை கைப்பற்றி சிறையில் அடைத்தது.