பன்னுக்கு ஒரு GST.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு GST ..! நீ பன்னு கொடு. நானே கிரீமை வச்சுகிறேன்..!

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள் என சீனிவாசன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் நிர்மலா சீதாராமன்அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு தொழில் துறையினர் மத்திய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை சில சமயங்களில் விவாதத்தை கிளப்பும். அந்த வகையில் தான் நேற்று முன்தினம் ஒரு சம்பவம் கோயம்புத்தூரில் நடந்தது. அதாவது கோயம்புத்தூர் கொடிசியாவில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளர் சீனிவாசன் பேசுகையில், ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க.

பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக்கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட்தான். ஒரே கிட்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்” என சீனிவாசன் தெரிவித்தார்.