பட்டியலினவர்களுக்கு முடிவெட்டினால் மற்ற சமுதாயத்தினர் தனது கடைக்கு வர மாட்டார்கள்..!

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் கிழக்கு காவேரிபுரத்தை சேர்ந்த இளையராஜா காவேரிபுரத்தில் உள்ள ரமேஷ் என்பவரின் முடி திருத்தும் கடைக்கு சென்று, தனக்கு முடி வெட்டும்படி கூறியுள்ளார். அதற்கு கடை உரிமையாளரான ரமேஷ் என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவருக்கு முடி வெட்ட முடியாது என கூறியுள்ளார். மேலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்டினால் மற்ற ஜாதியினர் தனது கடைக்கு வர மாட்டார்கள் என்றும் கூறி முடி வெட்ட மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் இளையராஜா புகார் அளித்தார். இதையடுத்து, முடி திருத்தும் கடை உரிமையாளர் ரமேஷ் மீது கொளத்தூர் காவல்துறை தீண்டாமை, வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.