“மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன் என நித்தியானந்தா வீடியோ வெளியிட்டார். சாமியார் நித்தியானந்தா “கதவைத்திற காற்று வரட்டும்” என்ற ஆன்மிக கட்டுரை எழுதியதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாக, ஆபாச வீடியோ முதல் மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக மடாதிபதியாக அறிவித்துக்கொண்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் நித்தியானந்தா சிக்கி தலைமறைவு வாழ்க்கை சாமியார் நித்தியானந்தா வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் காவல்துறை தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றுக்கு கைலாசா என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கேயே தங்கி அங்கிருந்தே சொற்பொழிவு ஆற்றிவந்த நித்தியானந்தா, நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதாக 2022-ஆம் ஆண்டு பரபரப்பாக தகவல் பரவியது.
அதற்கு பதில் அளித்த நித்தியானந்தா, 27 மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், மருத்துவ சிகிச்சையில் இருந்து தான் இன்னும் வெளியே வரவில்லை என்றும், பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் பரபரப்பு கருத்தை வெளியிட்டது மட்டுமின்றி, தான் சாகவில்லை என்றும், சமாதி மனநிலையை அடைந்தது இருப்பதாகவும், விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
அதன்பிறகு, கடந்த சில ஆண்டுகளாக வீடியோ எதிலும் நித்தியானந்தா தோன்றவில்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் காணொலி காட்சி மூலம் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டு இருந்தபோது, இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அப்போது அவர், “இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி உயிர் தியாகம் செய்துவிட்டார்” என்று தெரிவித்தார். இதனால், நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், உண்மையில் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது காவல்துறை வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான நித்தியானந்தாவின் புதிய யுக்தி இதுவா? என்பதை ஆமதாபாத் காவல்துறை விசாரித்து வந்தது. சாமியார் நித்தியானந்தா தம்மை பற்றி வெளியான தகவல்களை மறுத்து தாம் நலமுடன் இருப்பதாக நேற்று இரவு முதலே சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சாமியார் நித்தியானந்தா வெளியிட்ட வீடியோவில், தம்மை பற்றிய சமூக வலைதள கருத்துகளால் தாம் உயிரோடு இருக்கேனா இல்லையா என்பது தமக்கே சந்தேகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அதில், இன்னமும் ஆகக் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் உயிரோடு இருப்பேன்; இந்து எதிரிகள், இந்து வெறுப்பாளர்கள் என்னுடைய நேரத்தை வீணடிக்கின்றனர். நான் வன்முறையை விரும்பாதவன்; என் மீது அவதூறு பரப்புபவர்களை தாக்கப் போவதும் இல்லை. “மகனுங்களா.. நான் 126 வயதில்தான் பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போனவனுங்களா..ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டானுங்க..இதுக்கு மேல தொடர்ந்து செய்தீர்கள் என்றால் என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்டா.. வேணாம். வம்பு பண்ணாதீங்க.. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என நித்தியானந்தா அதில் பேசியுள்ளார்.
நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போட்டிருக்காங்க போல… ஹஹஹாஹா.. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க.. 4,000 கிளிப்ஸையும் எப்ப பார்த்து முடிக்கிறது? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத எக்ஸாமுக்கு போற ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் சந்தேகமாக இருக்கு.. நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு…எல்லா சோசியல் மீடியா, மெயின் ஸ்ட்ரீம் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்றாக சேர்ந்து,பஞ்சாயத்து கூடி ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்க என நித்தியானந்தா கேட்டுக் கொண்டுள்ளார்.