நடிகை கௌதமி போலவே கதறும் பாஜக பிரமுகர்..! பாஜகவினர் மீது பாஜக பிரமுகர் புகார்..!!

நடிகை கௌதமிக்கு பாஜக பிரமுகரான அழகப்பன் என்பவரிடம் திருவள்ளூர் மாவட்டத்தில் கோட்டையூரில் உள்ள 8.16 ஏக்கர் நிலத்தை கேட்க நிலத்தில் பிரச்சினை இருப்பதாக கூறி ரூ 4.10 கோடிக்கு விற்பனை செய்ததாக 2 தவணையில் பணத்தை கொடுத்துவிட்டு கௌதமியிடம் கையெழுத்து பெற்றனர்.

இந்நிலையில் தான் கடந்த 2021 -ம் ஆண்டு செப்டம்பர் 24 -ம் தேதி வருமான வரித் துறை அலுவலகத்தில் இருந்து கௌதமிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் கோட்டையூரில் உள்ள சொத்துகள் ரூ. 11,17,38,907 க்கு விற்பனை செய்ததில் கேபிட்டல் கெய்ன்ஸ் டேக்ஸ் ரூ 2.61 கோடி செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித் துறை கடிதத்தால் சந்தேகம் அடைந்த கௌதமி சொத்து விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை சுங்குவார்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நகல் எடுத்து பார்த்த போதுதான் 8.16 ஏக்கர் நிலத்தை 2016-ம் ஆண்டு பலராமனும் ரகுநாதனும் ரூ 11,17,38,907 க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதில் 4.10 கோடியை மட்டும் எனக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ 7,07,38,908 பணத்தை பாஜக பிரமுகர் ஆட்டைய போட்டது தெரியவந்தது.

இந்த செய்தி அடங்கும் முன்னே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கதிரேசன் கோவில் தெருவை சேர்ந்த பாஜக பிரமுகர் மாரியப்பன். இவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான 2.74 சென்ட் நிலமும் இரு கடைகளும் உள்ளன. இந்நிலையில் மாரியப்பன் வேலுமணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடனை அடைக்க 2.74 சென்ட் இடத்தை விற்பனை செய்ய மாரியப்பன் முடிவு செய்திருந்தார். இந்நிலையில் இவருடைய பாஜக நண்பர்களான விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் நல்லதம்பி மற்றும் ஆலம்பட்டியைச் சேர்ந்த அட்டை ராசு ஆகியோர் மாரியப்பனுக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்களும் சக கட்சியினர் என்ற அடிப்படையில் அவர்களை மாரியப்பன் நம்பி ஆவணங்களை கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மாரியப்பனின் இடத்தை விற்பதற்காக பாலசுப்பிரமணியன், நல்லத்தம்பி, அட்டை ராசு ஆகியோர் கயத்தாறை சேர்ந்த பாஜக வணிகர் பிரிவு மாநில செயலாளர் அசோக்குமார் என்பவரிடம் 1 சென்ட்டுக்கு ரூ 61 லட்சம் என கிரயம் பேசி மொத்த இடத்திற்கும் 1 .67 கோடியை ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதையடுத்து மாரியப்பன் தனது இடத்தை கிரயம் செய்து கொடுத்த நிலையில் அதற்கு சேர வேண்டிய ரூ 1.67 கோடியை தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் மூவரும் பணத்தை கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து மாரியப்பனை தொடர்ந்து மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோவில்பட்டி காவல் துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான மாரியப்பன் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தன்னை ஏமாற்றிய பாஜக பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தருமாறு மனு கொடுத்துள்ளார்.