ஆத்தூர் நகராட்சியின் நகரமன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் தலைமையில் நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் ஊழியர்கள் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் நகரமன்ற தலைவர் பேசியது.
அதிகாரிகளும் நகராட்சி ஊழியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் பொதுமக்கள் எந்த ஒரு குறைகள் சொன்னாலும் உடன்யடியாக அவர்களுக்கு பணிவுடன் பேசி நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே ஆத்தூர் நகராட்சி நிர்வாகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்கள்.
இந்த ஆய்வு கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.