திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்..!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சென்று வருகின்றன. இதனால் மத்திய பேருந்து நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கும்.

இந்நிலையில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தது.

இத்தனைத் தொடர்ந்து, நேற்று திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாவலர்கள் மூலம் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தையும் அகற்றினர். இதனால் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.