திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை பகுதியில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தாராபுரம் வழியாக திருப்பூர் புறப்பட்டு வரும் வழியில் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஒருவர் புதைகுழியில் சிக்கி மூழ்கி உள்ளார்.
அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக 8 பேர் சென்று மீட்க முயற்சி செய்து புதைகுழியில் சிக்கி மூழ்கி உள்ளார். அருகில் இருந்த மற்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற தாராபுரம் தீயணைப்புத் துறையினர் சரண், ஜீவா என்ற இரண்டு பேரை உயிருடன் மீட்டனர்.
பின்னர் புதைகுழியில் சிக்கி உயிரிழந்த அமிர்தகிருஷ்ணன், சக்கரவர்மன், ஸ்ரீதர், ரஞ்சித், யுவன், மோகன் என்ற 4 கல்லூரி மாணவர்கள், 1 பள்ளி மாணவர் உட்பட 6 பேரின் உடல்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாராபுரம் காவல்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் மகன் சஞ்சய் கடந்த 10 ஆம் தேதி தெற்கு புறமுள்ள புதைகுழியில் சிக்கி உயிரிழந்த போது இந்திய ஃபஸ்ட் டெய்லி ஆன்லைன் செய்தியில் அதிகாரிகள் மெத்தனத்தால் தொடரும் சோகம்: புதை மணல் குறித்து அபாய எச்சரிக்கை பலகைகள் எங்கே..!? இனியாவது அபாய எச்சரிக்கை பலகைகள் பளிச்சிடுமா..!? என கேள்வி எழுப்பி இருந்தோம்.
ஆனால் பொதுப்பணித் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்விளைவு இன்று 5 மாணவர்கள் உட்பட 6 பேர் உயிர் பலியாகியுள்ளனர். இனியாவது பொதுப்பணித் துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு பொதுமக்கள் கண்களுக்கு அபாய எச்சரிக்கை பலகைகள் வைப்பார்களா..?