தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வாக்காளர் சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி மாவட்ட வாரியாக இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதோடு 2025 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதுதவிர 01.01.2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 09.11.2023, 10.11.2024, 23.11.2024 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடந்தது.
கடைசி நாளான இன்று மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர்கள் எவ்வாறு பெயர் சேர்ப்பது, பெயர் நீக்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவரும், கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவருமான செல்வி ரமேஷ் தலைமை தாங்கினார். தாராபுரம் சொர்க்கம் ரமேஷ் முன்னிலை வகித்தார்.
கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொட்டாபுளிபாளையம் பகுதியில் வாகன பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புது காவல் நிலையம் வீதி புதுமஜீ தெரு பெரிய கடை வீதி போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர் அப்போது கடைவீதி மரக்கடை பள்ளிவாசலில் இருந்து தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் சொர்க்கம் ரமேஷ் மற்றும் கௌதம் உள்ளிட்ட தாவேகவினர். துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தமிழக வெற்றிக்கழக தாராபுரம். மேற்கு ஒன்றிய தலைவர் கவுதம், துணைத் தலைவர் தமிழரசன், தாராபுரம் நகர மகளிர் அணி தலைவர் சுமதி, நகரத் துணைத் தலைவர் நாகலட்சுமி மற்றும் ஒன்றிய மகளிர் அணி தலைவர் ரஞ்சிதா, செயலாளர் பெஸ்ட் நகர் கார்த்திகா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.