தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன் முன்னிலை வகிக்க, ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.த்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 418 மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர்.
அதில், தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் ஆலோசகர் வியனரசு, பொதுச் செயலாளர் அய்கோ மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி மாவட்ட பகுதியில் தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் வனத்துறையின் பொறுப்பில் இருந்து ஆற்றை விடுவிக்க வேண்டும. மாவட்ட பகுதியில் ஆற்றில் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு, அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும்.
மருதூர் அணைக்கு கிழக்கே இருந்து திட்டமிடப்பட்டு உள்ள புறவழிக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், குடிநீர் வடிகால் வாரியம் பொதுப்பணித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.150 கோடிக்கு அதிகமான நிலுவைத் தொகையை வசூலித்து தாமிரபரணி பராமரிப்பு, பாசன திட்ட மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.