தலைமை நீதிபதியிடம் நீதி கேட்கும் பெண் நீதிபதி..!

உத்தரப் பிரதேசத்தின் பாரபங்கி பெண் நீதிபதியாக இருந்தபோது சக மாவட்ட நீதிபதி ஒருவரால் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கடந்த ஆண்டு இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நிர்வாக நீதிபதியிடம் புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி, தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நான் நடைபிணமாக மாற்றப்பட்டேன். ஆகவே “உயிரற்ற எனது உடலைச் சுமந்து செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே எனது வாழ்க்கையை கண்ணியமான முறையில் முடிக்க தயவுசெய்து என்னை அனுமதிக்கவும்,” என்று குறிப்பிட்டுள்ளார் என்பது வேதனையான விஷயமாகும்.