தமிழ்நாடு அளவிலான சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்..!

அகில உலக சிலம்பம் சங்கம் சார்பாக தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை திருப்போரூர் கந்தசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சிலம்ப போட்டிகளில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்குமுன்னாள் MLA-யும், ஒன்றிய தலைவர் இதயவர்மன், திருப்போரூர் காவல் நிலைய அதிகாரிகள் குப்புசாமி சாந்தன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், மன்ற உறுப்பினர் நித்தியானந்தம், அகில உலக சிலம்புச் சங்க தலைவர் சுதாகர், புதிய புயல் ஆறுமுகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.