தமிழக நோயாளிகள் இந்தி கத்துக்கணுமாம்.. ! கட்டி‌ முடிக்காத மதுரை எய்ம்ஸ்‌ பெயரால் சேர்க்கப்பட்ட இந்தி‌ பேசும் மாணவர்களின் கருத்து..!

கடந்த 2015-16 மத்திய அரசின் பட்ஜெட்டில் பாஜக மிகவும் பெருமையுடன் அறிவித்தது. பின்னர் 2019 நாடாளு மன்ற தேர்தலுக்கு முன்பு, பிரதமர் மோடி எய்ம்ஸ் அடிக்கல் நாட்டி தற்போது வரை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் கொஞ்ச நாள் சென்றால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்காமலேயே முதல் பேட்ச் மாணவர்கள் மருத்துவர்களாக தேர்வாகி வெளியே வரும் நிலையில், கடந்தும் கட்டி‌ முடிக்காத மதுரை எய்ம்ஸ்‌ பெயரால் சேர்க்கப்பட்ட இந்த இந்தி‌ பேசும் மாணவர்கள், தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

அதாவது போதுமான இடவசதி, பேராசிரியர்கள், பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி, தங்களை வேறு எய்ம்ஸ் கல்லூரிக்கு மாற்ற வேண்டும் அல்லது ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று இம்மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.ஏற்கெனவே கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

இப்படி இருக்கையில், வடமாநில மாணவர்கள் மருத்துவம் பயில தமிழ்நாட்டில் இடம் கொடுத்தால், அவர்கள் நம் மக்களை இந்தி கற்றுக்கொள்ள சொல்கிறார்களே என்று பல்வேறு தரப்பினரும் சோஷியல் மீடியாக்களில் கொந்தளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.