நாடு முழுவதும் கோவிட் -19 பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டால் ஆபத்து என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி குறித்து மக்களிடம் மத்திய-மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. ஆனாலும் மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் அருகே உள்ள காந்தி சவுக், சக்கரகட்டி, கொல்லவாடே ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது கொல்லவாடே கிராம மக்கள் அதிகாரிகளை பார்த்ததும், கோவிட் -19 தடுப்பூசி போட பயந்து கிராமத்தை விட்டே வெளியேறினர்.
அதிகாரிகள் அவர்களை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர், ஆனாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்த அவர்கள், தடுப்பூசி போடுவதாக இருந்தால் ஊரை விட்டே செல்கிறோம் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.