சேம்பர் செங்கல் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அமைச்சரிடம் வழங்கல்


கோவிட் -19 யை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அரசுக்கு துணை நிற்கும் விதமாக முதலமைச்சரின் கோவிட் -19 தடுப்பு நிவாரண நிதிக்காக கரூர் மாவட்ட சேம்பர் செங்கல் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த். மு. வடநேரே முன்னிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் வழங்கினார்கள்.