சென்னை SPA-க்களில் ஜோராக நடந்த விபச்சாரம்..!

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புற்றீசல் போல் மசாஜ் சென்டர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதும் காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முக்கியமான இடங்களுக்கு வேலை தேடி செல்லும் அப்பாவி பெண்களும் மற்றும் சென்னைக்கு சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்பு தேடி செல்லும் பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு அவர்களின் எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், “சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் ஜனவரி 21-ஆம் தேதி அண்ணாநகர் மேற்கு பகுதியிலுள்ள ஒரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரின் உரிமையாளர் திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பிரேமா என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பிரேமா விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 3 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களில் இருந்து வேலை தேடி நகர்ப்புறத்துக்கு வரும் இளபெண்கள் சினிமா, டிவி சீரியல்களில் வாய்ப்பு தருவதாக சொன்னதை கேட்டு ஏமாற்ற பெண்கள், குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் மசாஜ் சென்டர்களில் வந்து சிக்கி கொள்கிறார்கள். அத்துடன், அவர்களின் மூளை சலவை செய்யப்பட்டு ஆசைவார்த்தைகளுக்கு ஏமாந்துபோய்,சொந்த ஊர் திரும்பி செல்ல முடியாமல் தவித்து வரும், எத்தனையோ அப்பாவி பெண்களை காவல்துறை பாதுகாப்பாக மீட்டும் வருகிறார்கள்.