குடும்ப உறவுகளில் மருமகன்கள் இன்னொரு தாயாக மாமியாரை பாவிப்பதும், இன்னொரு மகனாக மருமகனை அரவணைக்கும் மாமியார் என்ற அழகான உறவுகளில் சில சமயங்களில் விபரீத ஆசைகளால் உறவு சிக்கல்கள் எழுந்து விடுகின்றன. இதுபோன்ற விநோதங்கள் எல்லாம் வடமாநிலங்களில் அதிகரித்து காணப்படுவது வழக்கமாகும். அதிலும் குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்கள் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது.
கடந்த வாரம், அலிகார் பகுதியிலுள்ள மனோகர்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த ஜிதேந்திர குமார், தன்னுடைய மகள் ஷிவானிக்கு, ராகுல் என்ற மாப்பிள்ளையை பார்த்து திருமணத்துக்கு நிச்சயம் செய்து இருந்தார். திருமணத்திற்கு 2 நாட்களுக்கு முன்பு, ஜிதேந்திர குமார் மனைவி அனிதா, தனக்கு மருமகனாக வரப்போகும் ராகுலுடன் வீட்டை விட்டே ஓடிப்போய்விட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்னொரு பரபரப்பு இதே உத்தரபிரதேசத்தில் நடந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
உத்திரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டத்தில் சுனில் குமார் என்பவர் மனைவி மம்தா. இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்களுடைய மூத்த மகளுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு , சைலேந்திரா என்பவரின் மகனுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு சம்மந்தி சைலேந்திராவுக்கு மம்தாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.. இதுவே இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
தன்னுடைய கணவர் வீட்டில் இல்லாதபோது, சம்மந்தியை மம்தா வீட்டுக்கு வரவழைத்து பிள்ளைகளை வேறு அறையில் விட்டுவிட்டு, சம்மந்தியுடன் உல்லாசமாக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், மம்தா, தன்னுடைய சம்மந்தி சைலேந்திரா வீட்டை விட்டே ஓடிப்போய்விட மனைவியை காணாமல் அதிர்ச்சியடைந்த சுனில் குமார் காவல் நிலையத்திற்கு ஓட்டம் பிடித்துள்ளார். சுனில் குமாரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.