கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை அமைந்துள்ளது. இந்த சத்திய ஞான சபையில் சுமார் 100 ஏக்க நிலப்பரப்பில் சர்வதேச மையம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து. 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சர்வதேச மையம் அமைப்பதற்கு பணிகள் கடந்த மாதம் துவங்கியது.
இந்த நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு ராட்சசன் பள்ளங்கள் பெருவளி பகுதியில் தோண்டப்பட்டது. அந்த பள்ளத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி வள்ளலார் சத்திய ஞான சபைக்கு நிலம் வழங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்று வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் எதிரே போராட்டம் நடத்த முயற்சி செய்த அவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை நிலையில், வடலூர் பேருந்து நிலையத்தில் 300க்கும் மேற்பட்டோர் சன்மார்க்க அன்பர்கள் மற்றும் வள்ளலார் பக்தர்கள் ஒன்று திரண்டு வேண்டுகோள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் வடலூர் பேருந்து நிலையத்திலிருந்து வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை நோக்கி பேரணியாக புறப்பட முயற்சித்த அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் காவல் துறையை கண்டித்து சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.