இன்றைய நவீன மனிதன் ஆசை என்ற அரக்கனால் கவரப்பட்டு, அந்த அரக்கன் உள்மனதில் நுழைந்து நம்மை பந்த பாசங்களை துறக்க விட்டு பணம் ஒன்றே மூலப்பொருளாக எண்ணி குளம் குட்டைகள், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் என ஏதாவது ஒன்றை ஆக்கிரமித்து பல தொழில்கள் செய்வது மட்டுமல்லாது அதன்விளைவாக உருவாகும் குப்பை கூளங்களை கல்வி கூடங்கள், நீர்நிலைகள் என்றும் பாராமல் கொட்டி இன்று நாட்டையே சீரழித்து தான் மட்டுமே நன்றாக வாழவேண்டும் நாடும் நாட்டு மக்களும் நாசமா போன நமக்கு என்ன என்ற கீழ்த்தரமான புத்தியில் நம்மில் பலர் வெளியில் செல்வ சீமான்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதுமட்டுமல்லாது தான் ஆக்கிரமித்து வணிகம் செய்யும் சுத்தம் சுகாதாரமாக இருக்க வேண்டும் ஆனால் மக்கள் நடமாடும் சாலைகள் எப்படி போனால் என்ற எண்ணத்தில் குப்பை கூளங்களை சாலையிலேயே வீசுவதும் வேடிக்கையானது மட்டுமல்லாது துப்புறவு தொழிலாளிகளை ஒரு மனிதர்களாகவே மதிக்காமல் எங்க கொட்டினாலும் கூட்டி அல்லாடும் என்ற கீழ்த்தரமான புத்தியில் செயல்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு தொடர்ச்சியாக நாமக்கல் திருச்செங்கோடு வேலூர் ரோடு ஐசிஐசி பேங்க் எதிர்புறம் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் கட்டத்தில் அமைந்துள்ள பிளாக் பிகோ காபி கடையில் வரும் வாடிக்கையாளர்கள் விடிகாலைலேயே டீ, காப்பி கூடித்துவிட்டு சாலை போட்டு செல்லும் அவலம் தொடர்கதையாக நிலையில் இன்று காலை 7 மணி அளவில் நகராட்சி ஆணையர் அவர்கள் சாலையில் கிடந்த குப்பைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கடைக்காரர்களுக்கு அப்போதாவது புத்தி வருமா? என்ற எண்ணத்தில் துப்புறவு தொழிலாளிகளை அள்ளி வரச்சொல்லி கடையின் வாசலில் கொட்ட சொன்னார். இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் செயல்பட்டால் தமிழகம் இனிவரும் காலங்களில் குப்பை மிதக்கது என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.