தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டு மண்டல கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதன்பிறகு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். பொன்னம்பலமேட்டில் மகரஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதன்பிறகு ஜனவரி 20-ம் தேதியுடன் இந்த ஆண்டுக்காக மண்டல பூஜை, மகர ஜோதி பூஜை முடிவடைய உள்ளது.
இந்நிலையில் தான் கார்த்திகை மாதம் துவக்கத்தை விட தற்போது ஐயப்பன் கோவில் வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதற்கிடையே தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வருகிறது. இந்த வீடியோ என்பது நீலக்கல் பகுதியில் எடுக்ககப்பட்டுள்ளது. ஐயப்பன் தரிசனம் கிடைக்காமல் திரும்பும் பக்தர்கள் அதாவது சபரிமலை பக்தர்கள் தரிசனத்துக்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பக்தர்கள் வாகனம் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் இருந்த சிறுவனின் தந்தை காணாமல் போயுள்ளார். தனது தந்தை மாயமானதை அறிந்த அந்த சிறுவன் வாகனத்தின் ஜன்னல் வழியே பார்த்தபடி கதறி அழுதார். அப்போது அருகே காவலர் ஒருவர் வர தனது தந்தையை கண்டுபிடித்து தரும்படி அந்த சிறுவன் கைகளை கூப்பியபடி கெஞ்சி கோரிக்கை வைத்தார். சிறுவன் தனது தந்தையை காணவில்லை எனக்கூறி கைகளை கூப்பி கதறி அழுத வீடியோ இணையதளங்களில் வெளியாகி பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.