கர்நாடக மாநிலம் பெங்களூரில், 17 வயது சிறுவன் ஒருவன் கே.ஆர்.புரம் காவல் நிலையத்திற்கு வந்து நான் எனது அம்மாவை கொலை செய்து விட்டேன் என கூற, அதிர்ச்சியடைந்த காவல்துறை அந்தச் சிறுவன் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் அந்தச் சிறுவனின் தாயார் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ந்து போன காவல்துறை, என்ன நடந்தது என சிறுவனிடம் கேட்க, அவன் சொன்னதைக் கேட்டு காவல்துறை உறைந்து போனார்கள்.
சிறுவன் காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தபோது தனது தாய் காலை உணவு தயாரிக்க தாமதமாகி உள்ளது ஆனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறியுள்ளது. அதில் ஆத்திரமடைந்த சிறுவன் அருகில் இருந்த இரும்பு கம்பியால் அம்மாவின் தலையில் அடித்துள்ளான். இதனால் சிறுவனின் தாய் கீழே விழு, மயங்கிவிட்டார் என நினைத்த சிறுவன் தாயை எழுப்ப முயன்று அவர் எழுந்திருக்காததால் காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளான்.